47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை: ரூ. 3 லட்சம் திருட்டு

திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீசுவரர் ஆலயம் எதிரே ஹோமியோபதி கிளினிக் வைத்திருப்பவர் சுப்பிரமணியன் மகன் புனர்செல்வம். இவர் அந்தக் கடையிலேயே ஒரு தொண்டு நிறுவனமும் சேர்த்து நடத்தி

News image
Updated On :27 ஆகஸ்ட் 2013, 8:03 am

ரவி

திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீசுவரர் ஆலயம் எதிரே ஹோமியோபதி கிளினிக் வைத்திருப்பவர் சுப்பிரமணியன் மகன் புனர்செல்வம். இவர் அந்தக் கடையிலேயே ஒரு தொண்டு நிறுவனமும் சேர்த்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் ரூ. 2.75 லட்சம் பணம் வைத்திருந்தாராம். இவரது கிளினிக்கில் இருந்து அந்தப் பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு, அருகில் ஸ்ரீதரன் என்பவரின் மளிகைக் கடையை உடைத்துத் திருட முயற்சி செய்துள்ளனர். இயலாத சூழ்நிலையில், அருகில் இருந்த செருப்பு மற்றும் வளையல் கடைகளில் ரூ.35 ஆயிரத்தைத் திருடிச் சென்றனர். மொத்தம் ரூ. 3.10 லட்சம் திருட்டு நடந்துள்ளதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.