பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


பண்ருட்டி - கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இயங்கி வருகின்றன.
இன்று மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள காலி இடத்தில் பெரிய பாம்பு ஒன்று வந்தது. இதை நீதிமன்றத்துக்கு வந்திருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இது குறித்து உடனடியாக பண்ருட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...