ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவண்ணாமலையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திருவண்ணாமலை அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி, வெள்ளிக்கிழமை மாலை அண்ணன்-தம்பி உள்பட 3 பள்ளிச் சிறுவர்கள் இறந்தனர்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 4:34 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி, வெள்ளிக்கிழமை மாலை அண்ணன்-தம்பி உள்பட 3 பள்ளிச் சிறுவர்கள் இறந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மகன்கள் ஏழுமலை (9), விஜய் (7). அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் அபிஷேக் (10). மூவரும் முறையே அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 4, 2, 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூவரும் அங்குள்ள ஏரியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றனர். அங்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததாம். அந்த தண்ணீரில் கால்களைக் கழுவ சிறுவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் இறங்கியவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தூரத்தில் இருந்து இதைக் கவனித்த பெண் ஒருவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.