இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நோயாளிகள் படுக்கை கட்டணம் ரத்து: அண்ணாமலை பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் நலன் கருதி வசூலிக்கப்பட்ட நோயாளிகள் படுக்கை (BED Charge) கட்டணம் ரூ.80 வசூலிப்பதை ரத்து செய்வது என சனிக்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2013, 9:30 am

ஜி.சுந்தரராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் நலன் கருதி வசூலிக்கப்பட்ட நோயாளிகள் படுக்கை (BED Charge) கட்டணம் ரூ.80 வசூலிப்பதை ரத்து செய்வது என சனிக்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நாளை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகஅரசு நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், அரசு உதவிச்செயலாளர் (சட்டம்) அலெக்சாண்டர், பதிவாளர் என்.பஞ்சநதம், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் டாக்டர் சந்திரசேகரன் மற்றும் அனைத்து புல முதல்வர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இந்திய மருத்துவக்கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியத்தை பரிந்துரை செய்வது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அம்மா உணவகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் செயல்பாடின்றி இருந்த 10 தொலைதூரக்கல்வி தகவல் மையங்கள் மூடப்பட்டதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. மேலும் கூட்டத்தில் நிர்வாக ரீதியான நடைமுறையில் உள்ளவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது என பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.