இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடி

சிதம்பரத்தில் இரும்பு வியாபாரியிடம் ரூ.3லட்சம் பணத்தை மோசடி செய்த தொழிலாளி மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2013, 7:13 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் இரும்பு வியாபாரியிடம் ரூ.3லட்சம் பணத்தை மோசடி செய்த தொழிலாளி மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த இரும்பு வியாபாரி முருகன் (37). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிபாரதி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில தினங்கள் முன்பு வியாபாரி முருகன், தொழிலாளி மணிபாரதியுடன் சிதம்பரம் மேலவீதியில் உள்ள தனியார் சிட்பண்ட்ஸ் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது முருகன் தன்னிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை தொழிலாளி மணிபாரதியிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லிவிட்டு சீட்டு ஏலம் எடுக்க சிட்பண்ட் அலுவலகத்திற்குள் சென்றார். ஏலம் முடிந்து திரும்பி வந்து பார்த்த போது பணத்துடன் மணிபாரதி காணாமல் போனது தெரியவந்து அகிர்ச்சியுற்றார். பின்னர் மணிபாரதியை தேடிபார்த்தும் கிடைக்காததால்.

இதுகுறித்து முருகன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து மணிபாரதியை தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.