இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடத்துக்கான பூமிபூஜை  

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2013, 7:34 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நகராட்சி தற்போதைய அலுவலகத்திற்கு பின்புறம் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி ரூ 1.25 கோடி, நகராட்சி நிதி ரூ 1.25 கோடி, ஆக மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நகராட்சி நிர்வாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.