நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை


வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பலத்த மழை நீடித்தது.வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 61.4 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) : நாகப்பட்டினம்- 54.7, தலைஞாயிறு - 39.8, வேதாரண்யம்- 11.2.
இந்த நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. திடீர்க் காற்றுடன் மழை பெய்யக் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...