இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே வெள்ளாற்றிலிருந்து மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் கைது

சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் அருகே நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே

News image
Updated On :10 டிசம்பர் 2013, 2:32 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வெள்ளாற்றிலிருந்து மணல் கடத்தி வந்த லாரி டிரைவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் அருகே நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வேளங்கிப்பட்டு வெள்ளாற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்து நிறுத்திய போது, ஆவணங்கள் மற்றும் உரிமம் இன்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்து லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், லாரி டிரைவர் முத்துதமிழரசன் (பாலூத்தங்கரை), லாரி உரிமையாளர் பாண்டியன் (மேலமூங்கிலடி), மதியழகன் (சிதம்பரம்) ஆகிய மூன்று பேர் மீது மைன்ஸ் சட்டத்தின் படி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கில் டிரைவர் முத்துதமிழரசன் போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.