கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரத்தில் டிச.14 மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாம்

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிதம்பரம் அருகே மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளியில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாமை சனிக்கிழமை நடத்துகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 7:57 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிதம்பரம் அருகே மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளியில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாமை சனிக்கிழமை நடத்துகிறது.

மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.ராகவன் தலைமை வகிக்கிறார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முகாமை தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழித்தேவன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ந.பஞ்சநதம், நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், ரோட்டரி உதவி கவர்னர் வி.சிவப்பிரகாசம், அண்ணாமலைப் பல்கலை. கடல் அறிவியல் புல முதல்வர் கே.கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மிட்டவுன் ரோட்டரி சங்க செயலர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.