இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் முடக்கமடைந்துள்ளது. இந்த நிலையில், நாகை அருகே உள்ள சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த பரமசிவம்(34), தவமணி(40), பிரதீப்(20), மாணிக்கம்(21) ஆகியோர் பரமசிவத்துக்குச் சொந்தமான பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற நிலையில், கடல் சீற்றம் காரணமாக அந்த மீன்பிடி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மீனவர் தவமணி கடலில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற மீனவர்கள் 3 பேரும் நீந்தி கரையேறினர்.