கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வீராணம்ஏரி நீர் பகிர்வை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க உழவர் முன்னணி வேண்டுகோள்

வீராணம்ஏரியின் பராமரிப்பு, நீர் சேமிப்பு, நீர் பகிர்வு ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என

News image
Updated On :13 டிசம்பர் 2013, 8:47 am

ஜி.சுந்தரராஜன்

வீராணம்ஏரியின் பராமரிப்பு, நீர் சேமிப்பு, நீர் பகிர்வு ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழக உழவர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: விவசாயிகள் பாசனத் தேவைக்கு முன்னுரிமை அளித்து வீராணம்ஏரியின் உபரநீர் மட்டுமே சென்னை குடிநீர் தேவைக்காக எடுத்துச் செல்லப்படும் என தாங்கள் உறுதி அளித்தீர்கள். இந்த உறுதிமொழியை யாரும் பின்பற்றுவதில்லை. கடந்த ஆண்டு ஜனவரியில் ஏரியில் நீரின்றி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர்கள் காய்ந்தன. நீர்கேட்டு சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொறியாளரை அணுகிய போது நீரை திறந்துவிடும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

விவசாயிகள் தங்களுக்கும், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை செயலாளருக்கும் மனு அனுப்பியும் நடவடிக்கை இலவ்லை. மேலும் பருவ மழைக்காலத்தில் சென்னையை கருத்தில் கொண்டு வீராணம்ஏரியில் அதிக நீர் சேமிக்கப்படுகிறது. நீர் வெளியேற்றுவதை முறையாக செயல்படுத்தாமல், மழைக்காலங்களில் திடீரென அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் பயிர்கள் சேதமடைகின்றன. ஆண்டு தோறும் இந்நிலை தொடருகிறது என கடிதத்தில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.