இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப் பகுதியை முழுவதும் கண்காணிக்க 40 கண்காணிப்பு.....

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:15 pm

ஜெயகுமார்

தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப் பகுதியை முழுவதும் கண்காணிக்க 40 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு முடிக்கி விடப்பட்டுள்ளதாக கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் கூறினார்.

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதாலும், தீவிரவாதிகளின்  மிரட்டல் உள்ளதாலும் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் அண்மையில் வெட்டப்பட்டது. மேலும் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ள ஸ்ரீவடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரம், கோயிலின் தேர் ஆகியவற்றிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பாதுகாப்பு பலப்படுத்துவது குறித்து வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதன் பேரில் ராஜகோபுரம் நுழைவு வாயில், ஆடிப்பூர மண்டபம், ஸ்ரீஆண்டாள் பிறந்த நந்தவனம், ஆண்டாள் கோயில் சன்னதி, கடை வீதி, ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், சுற்று பிரகாரங்கள், கண்ணாடி மாளிகை முன்புறம், சக்கரத்தாழ்வார் சன்னதி, வடபத்ரசாயனர் கோயில் படிக்கட்டுகள், பகல்பத்து மண்டபம்  என 40 இடங்களிடம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனைக் கண்காணிக்க தக்கார் அறை, செயல் அலுவலர் அறை, போலீஸ் புற காவல் நிலையம் ஆகிய இடங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எதிர் எதிர் திசையில் பொருத்தப்பட்டுள்ளதால், கோயிலுக்குள் வருபவர்கள் முகம் தெளிவாகத் தெரியும். இதன் மூலம் கோயிலின் அனைத்துப் பகுதிகளும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது என்றார் தக்கார் ரவிச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.