ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை தாலூகா மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்: 8 கிராமங்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்

நாகை மீனவர்களின் மீதான இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென நாகை தாலூகா மீனவப்

News image
Updated On :15 டிசம்பர் 2013, 2:01 pm

சங்கர்

நாகை மீனவர்களின் மீதான இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென நாகை தாலூகா மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.

நாகையிலிருந்து 32 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 230-க்கும் அதிகமானோரை இலங்கைக் கடற்படையினர் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர். இதில், 110 மீனவர்களையும், 15 படகுகளையும் சிறைப்பிடித்து திரிகோணமலைக்குக் கொண்டுச் சென்ற இலங்கைக் கடற்படையினர், 17 படகுகளையும் அதிலிருந்த மீனவர்களையும் உடனடியாக விடுவித்தனர்.

இலங்கை திரிகோணமலைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை திரிகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், நாகை மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் கடந்த 5 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, கல்லாறு உள்பட நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை மீனவர்கள் விடுதலையாகும் வரை 8 கிராம விசைப் படகு மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. மத்திய, மாநில அமைச்சர்களைச் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.