மரபணு விதை உருவாக்க சாகுபடி கருத்தரங்கை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் புதன்கிழமை நடைபெற்ற மரபணு விதை உருவாக்க சாகுபடி கருத்தரங்கிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் புதன்கிழமை நடைபெற்ற மரபணு விதை உருவாக்க சாகுபடி கருத்தரங்கிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக பொருளாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து பல்கலைக்கழக செனட் ஹாலில் மரபணு விதை உருவாக்கம் மற்றும் சாகுபடி தொழில்நுட்ப இருநாள் கருத்தரங்கு தொடங்கி நடைபெற்றது.
தமிழகஅரசு ஏற்கனவே மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் அரசின் கொள்கைக்கு எதிராக கருத்தரங்கு நடத்துவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் மாதவன் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவர் வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் ஜீவா, புவனகிரி ஒன்றியத் தலைவர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...