மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மோட்டர் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் சாவு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை

Updated On :18 டிசம்பர் 2013, 11:27 am

பெண்ணாடத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சிறுவன் படுகாயம் அடைந்தான்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே செüந்திரசோழபுரம் காலனியை சேர்ந்தவர் சிவகுரு(30). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்(25). இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, பெண்ணாடம் அருகே பொன்னேரியில் நடந்த அய்யப்ப கன்னி பூஜையில் கலந்து கொள்ள சிவகுருவும், செந்திலும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சிவகுரு தன்னுடைய 5 வயது மகன் முத்தமிழ்செல்வனையும் உடன் அழைத்து சென்றார்.

பின்னர் பூஜை முடிந்து இரவு 11.30 மணியளவில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகுரு ஓட்டி செல்ல செந்திலும், முத்தமிழ்செல்வனும் பின்னால் அமர்ந்து வந்தனர். பெண்ணாடம்  நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிவகுரு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். செந்திலும், முத்தமிழ்செல்வனும் படுகாயம் அடைந்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில் உயிரிழந்தார். சிறுவன் முத்தமிழ்செல்வன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இந்தவிபத்து குறித்து பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.