கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடியே 26 லட்சம் கையாடல் வழக்கு: சிபி சிஐடி போலீஸார் தீவிர விசாரணை

சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கணக்கு தனிக்கையின் போது நகராட்சி காசாளர் பாலு என்பவர் ரூ.1 கோடியே 22 லட்சத்து, 44 ஆயிரத்து 773 ரூபாய் பணம்

News image
Updated On :19 டிசம்பர் 2013, 2:50 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கணக்கு தனிக்கையின் போது நகராட்சி காசாளர் பாலு என்பவர் ரூ.1 கோடியே 22 லட்சத்து, 44 ஆயிரத்து 773 ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வழக்கு நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையின் பேரில் தமிழகஅரசு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு குறித்து சிபி சிஐடி போலீஸார் வியாழக்கிழமை சிதம்பரத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நகராட்சியில் 2011 மார்ச் மாதம், 2008-09 ஆண்டிற்கான கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது கணக்கு சரிபார்த்த போது ரூ.1 கோடி 22 லட்சத்து, 44 ஆயிரத்து 773 ரூபாய் தொகை முறைகேடு செய்யப்பட்டு வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி காசாளர் எஸ்.பாலு தலைமறைவானார்.

தகவல் அறிந்த அப்போதிருந்த செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநர் வி.பி.தண்டபாணி சிதம்பரம் நகராட்சிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு காசாளர் எஸ்.பாலுவை தற்காலிக வேலைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். எஸ்.பாலு தலைமறைவானதால் கிராம நிர்வாக அலுவலர் முத்துநாயகம் முன்னிலையில் மாரியப்பாநகரில் உள்ள அவரது வீட்டில் தற்காலிக வேலைநீக்கம் உத்தரவு ஒட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.