கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஆசிரியர் பணி, அறப்பணியாகும்: ஷிவ்தாஸ்மீனா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை மாணவர் பேரவை துவக்கவிழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் நெ.உ.

News image
Updated On :20 டிசம்பர் 2013, 2:11 pm

ஜி.சுந்தரராஜன்

ஆசிரியர் பணி என்பது அறப்பணியாகும், அதன் மூலம் இந்நாட்டிற்கு சீரிய சேவை செய்ய வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை மாணவர் பேரவை துவக்கவிழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் நெ.உ.நெல்லையப்பன் தலைமை வகித்துப் பேசுகையில் சென்ற ஆண்டு கல்வியியல்துறையில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், கல்வியியல் துறையில் இந்த நூறு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என தெரிவித்தார். மாணவர் பேரவைத் தலைவர் இ.அன்பரசன் வரவேற்றார். மாணவர் பேரவை செயலாளர் பி.அருமைசெல்வன் பேரவையில் செயல் அறிக்கையை படித்தார். பல்கலவைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் மாணவர் பேரவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பயின்று ஆசிரியப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ந.பஞ்சநதம், கல்வியியல் புல முதல்வர் ஜி.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாணவர் பேரவை இணைச் செயலாளர் எஸ்.தீபிகா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.