கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தில்லையில் திருமுறைப் போட்டி! 10 ஆயிரம் மாணவர்களுக்கு திருமுறை நூல்கள்

சிதம்பரத்தில் சென்னை அநுபூதி அறக்கட்டளை சார்பில் இன்றைய சூழலில் திசை மாறிச்செல்லும் மாணவர்களை பக்தி நெறியில் வழிபடுத்தும் வகையில் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை

News image
Updated On :20 டிசம்பர் 2013, 2:12 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சென்னை அநுபூதி அறக்கட்டளை சார்பில் இன்றைய சூழலில் திசை மாறிச்செல்லும் மாணவர்களை பக்தி நெறியில் வழிபடுத்தும் வகையில் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை பயில வைக்க போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6,7,8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பளளி நிர்வாகத்தினர் ஜனவரி முதல் வாரத்தில் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றோரின் பட்டியல்கள் அறக்கட்டளைக்கு அளிக்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கலுக்கு பரிசளிப்பு விழா ஜன.12-ம் தேதி சிதம்பரம் காசிமடத்தெரு ஸ்ரீசிவகாமி அம்மை கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவில் திருப்பனந்தாள் காசிமட அதிபர் காசிவாசி சுவாமிகள் பரிசுகளை வழங்கி ஆசியுரையாற்றுகிறார்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பு பள்ளிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி அறக்கட்டளை செயலாளர் வி.முருகையன், செல்போன் 98400 49569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.