சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி புதுச்சேரி பெண் மரணம்
புதுச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் (68). இவர் தனது மனைவி ஜெகஜோதியுடன் (65) காரில் திங்கள்கிழமை காலை புறப்பட்டு சிதம்பரம் வழியாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர்.


சிதம்பரம் அருகே திங்கள்கிழை அன்று சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் (68). இவர் தனது மனைவி ஜெகஜோதியுடன் (65) காரில் திங்கள்கிழமை காலை புறப்பட்டு சிதம்பரம் வழியாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் புறப்பட்டனர். அப்போது சிதம்பரம் அருகே பி.முட்லூர் அருகே எம்ஜிஆர் சிலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இவ்விபத்தில் இருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய ஜெகஜோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கிருஷ்ணராஜ் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...