கடலூர் அருகே கிராம உதவியாளரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). கிராம உதவியாளர். இவர் திங்கள்கிழமை இரவு குடிகாடு அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
அப்போது எதிரில் வந்த மோட்டர் சைக்கிள், பாலகிருஷ்ணன் மோட்டர் சைக்கிள் மீது மோதியதாகவும், அப்போது மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேருக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது. இதில் 3 பேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளனர். கீழே விழுந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

