ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சேலத்தில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

சேலத்தில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருப்பதாக தொழிலாளர் ஆய்வாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On :27 டிசம்பர் 2013, 4:10 pm

சேலத்தில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருப்பதாக தொழிலாளர் ஆய்வாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளர் துணை ஆணையர் (பொறுப்பு) கலைவாணி உத்தரவின் பேரில் குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர் விஸ்வநாதன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சண்முகவேல் உள்ளிட்டோருடன் தொழிலாளர் துறை அதிகாரிகள் சேலம் புதிய, பழைய பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

 அப்போது பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் பல்வேறு பொருள்களை பயணிகளிடம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து 5 குழந்தைகளும் மீட்கப்பட்டு முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை தொழிலாளர்களாக அமர்த்திய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.