கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் மினி லோடு வேன் மோதி கொத்தனார் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Updated On :29 டிசம்பர் 2013, 8:13 am

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேலத்தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் காசி மகன் ராமச்சந்திரன் (26). திருமணம் ஆகாத இருவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு சென்ற மினி லோடு வேன் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.