தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை காய்ந்த நெற்பயிருடன் முற்றுகையிட்டு விவசாயிகள்

பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 50 பேர் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை காய்ந்த

News image
Updated On :31 டிசம்பர் 2013, 10:03 am

ஜி.சுந்தரராஜன்

பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 50 பேர் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை காய்ந்த நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் சுமார் 1300 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு செய்துள்ளனர். இவர்கள் மழையையும், சேத்தியாத்தோப்பு அணைக்கப்பட்டு பாசன நீரையும் நம்பி நெல் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருமாதத்தில் அறுவடை செய்ய உள்ள நிலையில் போதிய நீரின்றி வயல்கள் வெடித்து நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.  சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நீர் திறந்து விடப்படவில்லை.

இதனை அடுத்து பாசனத்திற்கு நீரை திறந்து விடக்கோரி பூவாலை கிராம விவசாயிகள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் சுமார் 50 காய்ந்து கருகி வரும் நெற்பயிர்களுடன் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஊரில் இல்லாததால் அலுவலக கண்காணிப்பாளர் வத்சலா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு இரு தினங்களில் பாசனத்திற்கு நீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் புகார் மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.