எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கில் போலீஸாரின் நடவடிக்கையால் விற்பனை தடை: அதிகாரி புகார்

காரைக்கால் கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் போலீஸாரின் செயல்பாட்டால் விற்பனை தடைபட்டுவிட்டதாக கூட்டுறவு அதிகாரி புகார் தெரிவித்தார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 1:23 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் போலீஸாரின் செயல்பாட்டால் விற்பனை தடைபட்டுவிட்டதாக கூட்டுறவு அதிகாரி புகார் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் கூட்டுறவு துறையின் நிறுவனமான புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம் (கான்பெட்) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் மூன்று இடங்களில் இயங்குகிறது. காரைக்கால் அருகே உள்ள அம்மாள்சத்திரம் பகுதியில் இயங்கும் நிலையத்திற்கு வந்த நிரவி காவல்நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை, பெட்ரோல், டீசல் வாகனத்தி்ற்கு போட செல்லும் வாகனங்களை, நிலையத்திற்குள் செல்லக்கூடாது என விரட்டியடித்தனர். இது பொதுமக்கள் மத்தியிலும், நிலையத்தின் ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கான்பெட் கூட்டுறவு நிறுவனத்தின் மேலாளர் எழிலரசு கூறும்போது, எல்லா அரசுத்துறை வாகனங்களும் கான்பெட்டில் பெட்ரோல், டீசல் போட்டுக்கொள்வதும், உரிய பணத்தை மாத இறுதியில் தருவதும் வழக்கம். காவல்துறை வாகனங்கள் மட்டும் கடந்த 2 மாதங்களில் ரூ.3 லட்சம் வரை நிலுவை வைத்திருக்கிறது. எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லாத சிரமம் உள்ளது. காவல்துறை உரிய தொகையை தராத நிலையில், வியாழக்கிழமை முதல் காவல்துறையின் வாகனங்களுக்கு டீசல் தருவதை நிறுத்திவிட்டோம். அதனால் அம்மாள்சத்திரம் நிலையத்தில் மட்டும் காவலர்கள் நின்றுகொண்டு வாகன சோதனை என்ற பெயரில், நிலையத்திற்குள் வாகனத்தை அனுமதிக்காமல் தடுப்பதாக புகார் வந்துள்ளது. நாளொன்றுக்கு 3 நிலையத்தின் சார்பிலும் ரூ.10 லட்சம் விற்பனை நடக்கும். குறிப்பிட்ட அம்மாள்சத்திரம் நிலையத்தில் ரூ.4 லட்சம் வரை விற்பனை வெள்ளிக்கிழமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறும்போது, அரசுத்துறைக்கு கடனுக்கு எரிபொருள் தரவேண்டுமென எந்த விதியும் இல்லை. ஆனால் காவல்துறை திடீரென அடாவடித்தனமாக நடந்துகொள்வதால் பொதுமக்கள் பாதித்துள்ளனர் என்றார்.

இதுகுறித்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.ஆண்டோ அல்போன்ஸிடம் கேட்டபோது, பொதுவாக வாகன சோதனை ஒவ்வொரு இடத்தில் செய்வதுபோல் நிலையத்தின் வாயிலில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகனம் எதையும் தடை செய்ததாக தகவல் இல்லை. இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றார்.

போலீஸாரின் நடவடிக்கையால் பரபரப்பாக தினமும் இருக்கக்கூடிய  கான்பெட் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

நிலைய வாயிலில் வாகனங்களை தடுத்து நிறுத்தும் போலீஸார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.