தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகளுக்கான நிவாரணம் திருப்தி அளிப்பதாக இல்லை

விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சனிக்கிழமை இரவு நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2013, 3:08 pm

சங்கர்

விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சனிக்கிழமை இரவு நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர்,

"வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசி அறிவித்துள்ள நிவாரணம் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனால் திருப்தி அளிப்பதாக இல்லை.

சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், சாகுபடி மேற்கொள்ளப்படாத விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதமும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில், அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.

நாங்கள் தூக்குத் தண்டனையை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறோம். அந்த வகையில், அப்சல் குருவுக்கும் இன்று அளிக்கப்பட்ட  தூக்கு தண்டனையை கண்டிக்கிறோம் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.