சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பெட்டிகள் ஜூன் மாதம் சென்னைக்கு வரவுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளை பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டோம் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.
பிரேசில் நாட்டின் சா பாலோ நகரத்தில் இந்நிறுவனத்தின் மெட்ரோ ரயில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நகரத்தில் இருந்துதான் முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் மொத்தம் 44 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் 4 பெட்டிகள் வீதம் மொத்தம் 168 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பெட்டியைத் தயாரிக்க மட்டும் ரூ.9 கோடி செலவு செய்யப்படுகிறது.
அதிகளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்க வேண்டி உள்ளதால், பிரேசில் நாட்டின் துணை நிறுவனம் ஒன்று ஆந்திர மாநிலம் தடாவில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 33 ரயில்களுக்கான பெட்டிகளும், பிரேசிலில் 9 ரயில்களுக்கான பெட்டிகளும் தயாரிக்கப்படும். மெட்ரோ ரயிலுக்கான மாதிரி ரயில் பெட்டி ஒன்று பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து, அது தடாவில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில் பெட்டியின் மாதிரியை பின்பற்றி தடாவில் மற்ற பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. முதல் மெட்ரோ ரயில் பெட்டி பிரேசில் நாட்டில் இருந்து வருகிற ஜூன் மாதம் சென்னைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் ரயில் பெட்டி வந்ததும், அந்த ரயில் பெட்டி மூலம் சோதனை ஓட்டத்துக்கான பரிசோதனைகள் நடத்தப்படும். இந்தச் சோதனை ஓட்டம் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் சுமார் 2 மாதம் மேற்கொள்ளப்படும்.
இந்தச் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் தான் மெட்ரோ ரயிலின் முதல் கட்டப் பயணம் எப்போது என்பது தீர்மானிக்கப்படும்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை இயக்கப்பட உள்ளது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் நீளத்துக்கு முதல் மெட்ரோ ரயில் பாதை. 2- வது மெட்ரோ ரயில் பாதை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டராகும்.
பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை தோண்டுவதற்காக சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 11 டனல் போரிங் இயந்திரம் வரவழைக்கப்பட்டன.
இதன்மூலம் நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வரை முதல் சுரங்கப் பாதையில் 360 மீட்டர் நீளத்துக்கும், 2-வது பாதையில் 315 மீட்டர் நீளத்துக்கும் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி வழியாக சென்ட்ரல் வரை முதல் வழித்தடத்தில் 800 மீட்டரும், 2-வது வழித்தடத்தில் 168 மீட்டர் நீளத்துக்கும் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
ஷெனாய்நகரில் இருந்து அண்ணாநகர் வழியாக திருமங்கலம் வரை முதல் வழித்தடத்தில் 73 மீட்டர் நீளத்துக்கும், மே தின பூங்காவில் இருந்து அண்ணாசாலை வரையான முதல் சுரங்கப்பாதையில் 75 மீட்டர் நீளத்துக்கும், மே தின பூங்காவில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் பாதையில் 7 மீட்டர் நீளத்துக்கும் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை தோண்டி முடிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி வரை சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

