சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நின்றிருந்த பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓமலூரை அடுத்த மூக்கனூரில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு ஓ-17 என்ற நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மூக்கனூரில் இருந்து புறப்பட்ட பேருந்து, காலை 11.25 மணியளவில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிக்கனம்பட்டி, குப்பூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.
அப்போது ஓசூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சாம்பல் பாரம் ஏற்றிய லாரி, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதனால் பேருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தள்ளப்பட்டு தேசிய நெடுஞ்சாலையின் சேவைச் சாலையைத் தாண்டி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த கோர விபத்தில் பேருந்தின் பின்பகுதி முழுவதும், லாரியின் முன்பகுதி பகுதியளவும் கடுமையாக சேதமடைந்தன.இந்த விபத்தில் பயணிகள் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த சு.மணி (50), அரூர், பி.புதூரைச் சேர்ந்த ச.பாஸ்கர் (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த சிக்கனம்பட்டி செல்வம் (33), கோவிந்தராஜ் (37), வீரபாண்டியூர் ஸ்ரீதர் (24), ஓபுலட்சுமி (29), சரசு (33), நல்லம்மாள் (55), மல்லிகா (37), பேருந்து ஓட்டுநர் செல்வம், நடத்துநர் மாட்டுக்காரன் புதூரைச் சேர்ந்த ரா.மனோகரன் (45), லாரி ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் உடனடியாக ஓமலூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்த தகவலறிந்ததும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் முத்துக்கருப்பன், பொன் கார்த்திக்குமார் (பயிற்சி), ஓமலூர் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர், ஓமலூர் நிலைய அலுவலர் மாரியப்பன் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு - மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

