ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாக தமிழக ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 14 புதிய ரயில்கள், 6 ரயில்களின் வழித்தடம் நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த ரயில் திட்டங்கள் எதுவும் போதுமானதாக இல்லை. மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள இரட்டைப் பாதை திட்டங்கள், அகலப்பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது தெற்கு ரயில்வே வட்டாரத்தில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தாமதமாகும் இரு வழிப்பாதை :
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு அகலப்பாதை மட்டுமே உள்ளது. இதை இருவழிப் பாதையாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு இந்த பட்ஜட்டில் எந்தவித தீர்வும் சொல்லப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கான நிதி கால வரைவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படாதது தென் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் வருவதற்கான ரயில்களின் போக்குவரத்துக்கு குறைந்தபட்சம் இரு தனித்தனி ரயில் பாதைகள் தேவை.
ஆனால் சென்னை தொடங்கி நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இருவழிப்பாதை அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடியவடையவில்லை.
செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில் இப்போது சென்னை முதல் தாம்பரம் வரை நான்கு வழிப்பாதையும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இரண்டு வழிப்பாதையும் உள்ளன.
அதேபோல் திண்டுக்கல் முதல் மதுரை வரை இருவழிப்பாதை உள்ளது. இடைப்பட்ட நிலையில் செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில் ஒருவழிப்பாதைதான் இருக்கிறது.
முழுமையடையாத பணி: சென்னை முதல் விழுப்புரம் வரையிலான 103 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இரட்டைப்பாதை அமைக்கும் திட்டம் 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் செங்கல்பட்டு முதல் தொழுப்பேடு வரையிலான இரட்டைப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தொழுப்பேடு முதல் பேரணி வரையிலான பணிகள் இன்னமும் முடியாததால் செங்கல்பட்டு, விழுப்புரம் இரட்டைப்பாதைத் திட்டம் முழுமையடையாமல் இருக்கிறது.
சென்னை - திண்டுக்கல் இரட்டைப்பாதை பணி நிதி பற்றாக்குறை காரணமாக எப்போது முடிவடையும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் கேரள மாநிலத்தில் ஓரளவுக்கு அனைத்து முக்கிய வழித்தடங்களும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்ப அறிவிப்புகள் இல்லை: ஏசி இரண்டடுக்கு ரயில்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.
ரயில் விபத்து ஏற்படும்போது எச்சரிக்கும் கருவி பொருத்துவது குறித்த அறிவிப்பு இருந்தும் அதற்கான திட்டங்கள் ஏதுவும் இல்லை.
அதேபோல கடந்தாண்டு பட்ஜெட்டில் 2500 ரயில்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பயோ டாய்லெட் முறை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு பட்ஜெட்டில் பயோ டாய்லெட் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தண்டவாளங்களின் நிலை: "இந்தியாவில் ரயில்வே தண்டவாளங்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. எந்தத் தண்டவாளமும் நவீனமயமாக்கப்படவில்லை. தண்டவாளங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை ரயில்வே வாரியம் மேற்கொள்ளவில்லை, அதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது' என்றார் தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர்.
100 ரயில்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தில், இப்போது 150 ரயில்கள் செல்கின்றன. இதனால் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. உலகளவில் பல நாடுகளில் தண்டவாளங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய நவீன உத்திகள் புகுத்தப்பட்டு வருகின்றன அவ்வாறான அறிவிப்புகள் இல்லாதது பயணிகளின் பாதுகாப்பின் மேல் உள்ள அக்கறையை கேள்வி குறியாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

