கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கேபிள் டிவி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியகுப்பத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கேபிள் டிவி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியகுப்பத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரைகளை மீறி முன்னறிவிப்பின்றி இணைப்புகளை துண்டித்தல் கூடாது, ஆப்ரேட்டர்கள் உடமைகளை பறிமுதல் செய்யக்கூடாது, மின்கட்டணம், சாதனங்கள் விலை உயர்வு, பொய்வழக்குகள் பதிவு செய்தலை கைவிட வேண்டும்.
மேலும் கேபிள் டிவி கட்டணத்தை சந்தாதாரர்களே ஆன்லைன் மூலம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...