எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வறட்சி நிவாரணம் கோரி காரைக்காலில் விவசாயிகள் பேரணி

வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், காரைக்காலில் நீர்நிலைகளை ஏற்படுத்தி தண்ணீர் கிடைக்கும் காலத்தில் தேக்கிவைக்க நடவடிக்கை கோரியும், விவசாயிகள் வியாழக்கிழமை பேரணி நடத்தினர்.

News image
Updated On :28 பிப்ரவரி 2013, 5:06 pm

செல்வ முத்துகுமாரசாமி

வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், காரைக்காலில் நீர்நிலைகளை ஏற்படுத்தி தண்ணீர் கிடைக்கும் காலத்தில் தேக்கிவைக்க நடவடிக்கை கோரியும், விவசாயிகள் வியாழக்கிழமை பேரணி நடத்தினர்.

காரைக்கால் பிரதேச விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

கோரிக்கைகள் :

காரைக்கால் பகுதிக்கு கிடைக்கவேண்டிய காவிரித் தண்ணீர் கிடைக்க அரசு முயற்சிக்காததால், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, ஆழ்குழாய் பாசனம், கிடைத்த மழைநீரைக்கொண்டும் விவசாயம் செய்து பயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அண்டை மாநிலமான தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்ததுபோன்று காரைக்கால் விவசாயிகளுக்கு புதுவை அரசு நிவாரணம் அறிவிக்கவில்லை. காரைக்காலை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் தரவேண்டும்.

தண்ணீரை சேமிக்கக்கூடிய ஏரிகளை காரைக்காலில் வெட்டவேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் தரவேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். கூட்டுறவு மற்றும் வங்கி விவசாயக் கடனை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கைகைகளை ஆதரித்து காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், முன்னாள் வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், முன்னாள் பேரவை உறுப்பினர் அ.மாரிமுத்து, காரைப் பிரதேச விவசாயிகள் சங்க துணைச் செயலர் பி.தங்கராசு உள்ளிட்டோர் பேசினர்.  முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிங்காரவேலு, கீதாஆனந்தன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஆட்சியரகம் அருகே முடிவடைந்த பேரணியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் சார்பு ஆட்சியர் அ.முத்தம்மாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.