விழியிழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : சேலத்தில் ஆசிரியர் கைது
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அரசு விழி இழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அரசு விழி இழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் அரசு விழி இழந்தோர் பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் சேலம், தருமபுரி, நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்த 18 மாணவிகள் உட்பட 78 மாணவ, மாணவிகள் பள்ளியிலேயே தங்கியிருந்து படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் நடராஜன் என்பவர் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது.
புகாரினை ஏற்ற சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி, அப்பள்ளிக்கு நேற்று சென்று, மாணவிகளிடமும், அப்பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் என்ற அமைப்பின் தலைவர் சேவியரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் இன்று இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரிடம், தொழிற்கல்வி ஆசிரியர் நடராஜன் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பதற்கான சட்டம் 2012 பிரிவு 7, 9, 11, இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் நடராஜனை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...