யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் : கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2013, 6:42 am

தங்கராஜா

சேலத்தில் இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் எருமாபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (29). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கிளைச் செயலாளராகவும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்த மெய்யழகன்  (27) சாராய வியாபாரம் செய்து வந்தார். சிவக்குமார் கட்சியில் இருந்ததால், அவ்வூரில் சாராயம் காய்ச்சுபவர்களின் விவரங்களை காவர்லதுறைக்கு அளித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 28.5.2008 அன்று களரம்பட்டி முக்கியச் சலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிவக்குமாரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்குத் தொடர்பாக 13 பேரை கைது செய்தனர் காவல்துறையினர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட மெய்யழகன், அவரது நண்பர்கள் முரளி (26), மாரியப்பன் (27), தனபால் (36) ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருந்தார். மற்றவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.