பணியின் போது உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் குடும்பங்களுக்கு நிதியுதவி

பணியின் போது உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Updated on
1 min read

பணியின் போது உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழ் நாடு மின்சார வாரியம், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி உப கோட்டத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த அசோகன் 24.12.2012 அன்று கண்ணேரிமுக்கு என்ற இடத்தில் மின்கம்பத்தில் பழுதுப் பார்க்கும் பணியினை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், திருத்தணி கோட்டம் மின்சார வாரியப் பிரிவில் மஸ்தூராகப் பணி புரிந்து வந்த ரஹீம் பாட்சா 27.12.2012 அன்று கார்த்திகாபுரத்தில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில், பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த அசோகன் மற்றும் ரஹீம் பாட்சா ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com