பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாபநாசத்தில் படகு சவாரி நிறுத்தம்: மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக புகார்

பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அணைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புலிகள்

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:34 am

தினமணி

பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அணைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல அனுமதியில்லை. பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நிபந்தைகளுடன் புலிகள் காப்பகம் கடந்த டிசம்பர் மாதம் 7 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அணையில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைப் பகுதியில் சுற்றுலா சார்ந்த தொழில் செய்து வரும் 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று மணிமுத்தாறு வந்த பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பியை சந்தித்து மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து புகார் தெரிவித்தனர். தாமிரவருணி சுற்றுலாப் பயணிகள் படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் என். கோபாலகிருஷ்ணன், கே. கலான் உள்ளிட்டோர் மனோஜ்பாண்டியன் எம்.பி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.