வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் சா.காமேஷ் (24). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்குத் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காமேஷ், அண்மையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தாராம்.அதேவேளையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சில ரெளடிகளுக்கும் காமேஷூக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் காமேஷ் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபர், எஸ்.எம்.நகர் மைதானத்துக்கு அவரை வருமாறு அழைத்ததாக தெரிகிறது.