மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்
மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.


மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.
இந்த விரைவு ரயில் மைசூர், மயிலாடுதுறை இடையே தினசரி கரூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் மைசூரிலிருந்து தினசரி இரவு 2 மணிக்கு கரூர் வந்து சேரும். சனிக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 4.20 மணிக்கு வந்து சேர்ந்தது.
இதனால், இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் 2 மணி நேரம் கடும் பனியில் காத்திருக்க நேரிட்டது. நெல்லை, ஜம்முதாவி விரைவு ரயில், சென்னை, கோவை விரைவு ரயில்கள் ஈரோடு ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்ததால், மைசூர், மயிலாடுதுறை விரைவு ரயில் தாமதமாக கரூர் வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...