வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஷிண்டேவை பதவி நீக்கக் கோரி பாஜகவினர் ரயில் மறியல்: 300 பேர் கைது

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷ்ண்டேவை பிரதமர் நீக்க வலியுறுத்தி, புதுவை மாநில பாஜக தலைவர் தலைமையில் காரைக்காலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2013, 9:21 am

செல்வ முத்துகுமாரசாமி

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷ்ண்டேவை பிரதமர் நீக்க வலியுறுத்தி, புதுவை மாநில பாஜக தலைவர் தலைமையில் காரைக்காலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் புதன்கிழமை காரைக்காலில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுவை மாநில பாஜக தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். புதுவை மாநில செயலரும், காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம்.அருள்முருகன் முன்னிலை வகித்தார்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் பாஜகவினர் திரளாக திரண்டனர். காரைக்கால் முதல் திருச்சிக்கு பகல் 12.15 மணிக்கு புறப்படு்ம ரயில் முன்பு பாஜகவினர் அமர்ந்து, உள்துறை அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாநில பாஜக தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் பேசியது :

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை காவி தீவிரவாதம் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை அவர் உடனடியாக வாபஸ்பெறவேண்டும் அல்லது அவரை பிரதமர் பதவிநீக்கம் செய்யவேண்டும். பாகிஸ்தான், சீனாவுடன் நடந்த போருக்கு முன்பும்,  பின்பும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு மதித்து கருத்துகளை கேட்டு செயல்பட்டார். இப்போதுள்ள காங்கிரஸ் அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். தேசப்பற்று மி்கக இயக்கங்களை உதாசீனமாக நடத்துகிறது. இந்திய மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த அரசு மறந்துவிட்டது.

மத்தியில் தேர்தல் வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது ஏதாவது குற்றச்சாட்டை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த புகார்களை மக்கள் ஏற்பதில்லை. தேர்தல் தோல்வி பயம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டதையே  ஷிண்டேவின இதுபோன்ற பேச்சுகள் உறுதிபடுத்துகிறது. ஷிண்டே உள்துறை அமைச்சராக நீடிக்க தகுதியானவர் அல்ல. அவர் பதவி விலகும் வரை பாஜக தொடர் போராத்தில் ஈடுபடும் என்றார்.

போராட்டத்தில் புதுவை பாஜக பொதுச்செயலர் ஆர்.வி.சுவாமிநாதன்,.மாநில துணைத் தலைவர் பரந்தாமன், மாநில விவசாய அணி பொறுப்பாளர் எஸ்.இளங்கோவன், மாவட்டத் தலைவர் ராஜவேலு, பொதுச்செயலர் பழனிவேலு உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸார் - பாஜகவினர் வாக்குவாதம் :

காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் பகல் 12.15 மணிக்கு புறப்படுவதற்கு 10 நிமிடம் முன்பே ரயில் முன்பு மறியலை கட்சியினர் தொடங்கினர். ரயில் குறித்த நேரத்தில் செல்லவேண்டுமென போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு குறித்த நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.