நாகை திரையரங்கில் விஸ்வரூபம் பாதியில் நிறுத்தம்
நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது.


நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு திரைப்படமும் திரையிடப்பட்டது.
இந்நிலையில், இந்தச் செய்தியைக் கேட்டு அங்கே வந்த நாகை வட்டாட்சியர், திரையரங்கு உரிமையாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திரைப்படத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னார். இதை அடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது. ரசிகர்களின் கூச்சல் குழப்பத்துக்கு இடையே அவர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...