கீழணை கட்டப்பட்டதிலிருந்து கல்லணையிலிருந்து உள்ளாறு மூலம் கொள்ளிடத்தில் விடப்படுகிறது. கீழணை பாசனத்திற்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம்ஏரி, கஞ்சங்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன பரப்பிற்கு பயன்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாக பிரிந்து வடக்குபிரிவு கொள்ளிட ஆறு, தெற்குபிரிவு கொள்ளிடஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ தூரத்தில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.