தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆஸ்திரேலிய பறவை கரூரில் மீட்பு

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரம் அருகில் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால், மிகப் பெரிய அலகும், இறக்கையும் உடைய பறவை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. இதுகுறித்து

News image
Updated On :1 ஜூலை 2013, 12:53 pm

கண்ணன்

கரூரில் மின் தாக்கி காயம்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை பறவையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரம் அருகில் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால், மிகப் பெரிய அலகும், இறக்கையும் உடைய பறவை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் சிவஞானம் தலைமையிலான வனக் காவலர்கள் விரைந்து செனறு அந்த பறவையை மீட்டனர்.  மினசாரம் பாய்ந்து ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கூழைக்கிடா வகையைச் சேர்ந்த பறவை ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருக்கலாம் என வன அலுவலர்கள் தெரிவித்தனர். செல்லும் வழியில் மின் கம்பியில் உட்கார்ந்த போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்து கீழே விழுந்துள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, பொன்னணியாறு அணைப் பகுதியில் விடப்படும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.