47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமதாஸ், திவ்யாவின் தாய் உள்ளிட்டோர் மீது இளவரசனின் தந்தை புகார்

இளவரசனின் மரணத்துக்கு, பாமக தலைவர் ராமதாஸ், திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்டோரே காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :6 ஜூலை 2013, 9:05 am

ரவி

இளவரசனின் மரணத்துக்கு, பாமக தலைவர் ராமதாஸ், திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்டோரே காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தருமபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசனின் அப்பா, காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தன்  மகன் தற்கொலையோ, கொலையோ செய்யப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்துக்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தருமபுரி முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், திவ்யாவின் அம்மா தேன்மொழி, அவர்களது வழக்குரைஞர் பாலு, செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகேசன் ஆகியோர் தான். இந்த புகாரை பதிவு செய்து, எப்ஐ ஆர் நகலைக் கொடுக்குமாறு காவல்நிலையத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.