மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சம்பளத் தொகையை வழங்ககோரி 500பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 4வார சம்பளத் தொகையை வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று

Updated On :8 ஜூலை 2013, 2:58 pm

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 4வார சம்பளத் தொகையை வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள வாயலூர், நெய்தவாயல், நாலூர், சிறுவாக்கம், மெரட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். 4வாரமாக சம்பளம் வழங்கவில்லை... மேற்கண்ட கிராமங்களில் வேலை செய்து வரும் தொழிலாலர்களுக்கு 4வாரமாக சம்பளத் தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து நிலுவையில் உள்ள 4வார சம்பளத் தொகை வழங்க கோரி மேற்கண்ட கிராமங்களை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை விரைந்து  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.