47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளவரசன் சடலம் மறு ஆய்வு: மருத்துவர்கள் விசாரணை

தருமபுரியில் இளவரசன் சடலத்தை மருத்துவர்கள் குழு இன்று மறு ஆய்வு செய்தது.

News image
Updated On :11 ஜூலை 2013, 6:02 am

ரவி

தருமபுரியில் இளவரசன் சடலத்தை மருத்துவர்கள் குழு இன்று மறு ஆய்வு செய்தது.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி, இன்று காலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த இரு மருத்துவர்களைக் கொண்ட குழு, இளவரசன் உடலை மறு ஆய்வு செய்தது.

பின்னர் அவர்கள் இருவரும், இளவரசன் சடலமாக மீட்கப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதிக்குச் சென்று, இளவரசன் எந்த வேகத்தில் விழுந்திருப்பார். மூளை சிதைவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து ஆய்வு செய்து, இது குறித்து இளவரசன் தந்தையிடமும் விசாரித்தார்கள். இளவரசன் ஏன் இந்த இடத்துக்கு வந்தான் என்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர், வழக்கமாக இளவரசன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இடம்தான் என்றார். பின்னர் அவர்கள் உறவினர்களிடம் இறப்பதற்கு முன் ஏதாவது பேசினானா என்பது குறித்தும் விசாரித்தனர்

பலத்த பாதுகாப்புடன் வந்த இருவரும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இன்று இரவுக்குள் அறிக்கை தயார் செய்து கொடுத்து விடுவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.