விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகளை திருடியதாக பால் வியாபாரி கூட்டாளிகள் 4 பேர் கைது

விருதுநகர் பகுதிகளான சிவகாசி, சாத்தூர் மற்றும் மாரனேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருந்த வீடுகளில் இரவு நேரங்களில் நகை பணம் ஆகியவை திருடு போவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் திருடியதாக பால் வியாபாரி கூட்டாளிகள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விருதுநகர் பகுதிகளான சிவகாசி, சாத்தூர் மற்றும் மாரனேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருந்த வீடுகளில் இரவு நேரங்களில் நகை பணம் ஆகியவை திருடு போவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 7ம் தேதி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த செந்திகுமார் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்று விட்டதாக சிவகாசி கிழக்கு நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதையடுத்து, சாத்தூர் பகுதியில் 4 வீடுகளில் 10 சவரன் நகை வரையி்ல் திருடு போயிருந்தது.

இது தொடர்பாக சாத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் தனிப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலையில் சாத்தூர்-சிவகாசி பிரிவு சாலையில் பொன்மாரி என்ற பெண்ணிடம் நகை வழிப்பறி செய்துள்ளனர். அதையடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரண்பாடன தகவல் தெரிவித்தனர். அவர்களை சாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்தனர்.

அதில், கோவில்பட்டி நாகாலபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ரமேஷ்குமார்(25). இவர் தற்போது சிவகாசி போஸ் காலனியில் குடியிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். அப்போது, அதே பகுதியில் குடியிருந்து அச்சகத்தில் வேலை பார்த்து வரும் சுபாஷ்சந்திரபோஸின் மகன் உதயசரவணன்(30), மூக்கையா மகன்  வைரமுத்து(33), ரங்கசாமி மகன் கண்ணன்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு இருந்த கடனை அடைப்பதற்காக திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகவும், காலை, மாலையில் பால் வியாபாரம் செய்யும் போது  ரமேஷ்குமார் நோட்டம் விட்டு, ஆள்கள் இல்லாத வீடுகளில் திருடி, பங்கிட்டு கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீடுகளில் மறைத்து வைத்திருந்த 110 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

அப்போது, உடன் காவல் ஆய்வாளர் ராமசாமி மற்றும் தனிப்படை பிரிவினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com