திருவாடானை தாலுகா கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(40) இவர் மாதா கோவில் அருகே குடியிருந்து வருகிறார்.திங்கட்கிழமை அன்று அதே ஊரை சேர்ந்த சில நபர்கள் திருமண விளம்பரம் மாதா கோவில் சுவரில் ஒட்டியுள்ளனர் சிறிது நேரத்தில் கிழிக்கபட்டதால் ஆத்திரம் அடைந்த அதே ஊரைசேர்ந்த ரவி,சுரேஷ்,ராஜமாணிக்கம் ஆகியோர் செல்வியிடம் ஏன் போஸ்டரை கிழித்தாய் என்று தாக்கினார்களாம் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை போலிசார் ரவி,சுரேஷ்,ராஜமாணிக்கம் உடப்ட 8பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.