புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலைமறியல்: 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது

சிதம்பரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :18 ஜூலை 2013, 9:56 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு பொய்யான வழக்குகளை போடுவதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை சிதம்பரம் சபாநாயகர்தெருவில் மாவட்டச் செயலாளர் சபா.சசிகுமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆர்.பாலு, ஆர்.பி.ராஜா, திருஞானசம்பந்தம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழரசன், முகமது ஐயூப், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆர்.உமாநாத், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயமணிகண்டதேவன், சீனுசங்கர், ராஜவேல்,பானுசந்தர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கைது செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.