எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

தேனியில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On :19 ஜூலை 2013, 5:50 pm

தேனியில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

      தேனி அல்லிநகரம், காந்திநகரைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தேனி, அரசு மருத்துவமனை தெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). கார்த்திக்குமாரின் வீட்டுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று வரும் வழக்கமுள்ள கார்த்திக், வெள்ளிக்கிழமை கார்த்திக்குமாரின் வீட்டு முன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, கார்திக்குமாரின் மனைவி வித்யாவை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்தாராம்.

      இதற்கு மறுத்ததால், கார்த்திக் தன்னுடன் தகராறு செய்து தாக்கியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல் சார்பு ஆய்வாளர் சீனிவாசன் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.