எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மிரட்டல் புகாரில் ஒருவர் கைது

தேனியில் அந்தரங்க காட்சியை பதிவு செய்து வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச் செயலரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On :19 ஜூலை 2013, 5:51 pm

தேனியில் அந்தரங்க காட்சியை பதிவு செய்து வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச் செயலரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

      தேனி, அரசு மருத்துவமனைதெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). இவர், ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தை தனது செல் போனில் பதிவு செய்து வைத்திருந்தாராம். இந்த செல்போனை தேனி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலர் அல்லிநகரத்தைச் சேர்ந்த வீரதெய்வம்(25)  திருடி வைத்துக் கொண்டு, தன்னை மிரட்டி ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செல்லத்தம்பி உடந்தையாக இருந்ததாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார்.

       இந்தப் புகாரின் அடிப்படையில், வீரதெய்வம், செல்லத்தம்பி ஆகியோர் மீது அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் வழக்கு பதிந்து, வீரதெய்வத்தை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.