முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 4 பேர் கைது..
அவனியாபுரத்தில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய வழக்கில் அவனியாபுரம் போலீஸார் சநிக்கிழமை 4 பேர்களை செய்தனர்.மேலும் இவ்வழக்கில் முன்னாள் மண்டலத்தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அவனியாபுரத்தில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய வழக்கில் அவனியாபுரம் போலீஸார் சநிக்கிழமை 4 பேர்களை செய்தனர்.மேலும் இவ்வழக்கில் முன்னாள் மண்டலத்தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 54.வது வார்டு முன்னாள் கவுன்சிலர் மலைச்சாமி.திமுகவை சேர்ந்தவர்.இவர் வெள்ளிக்கிழமை தனது நண்பர்கள் வன்னிசெல்வம்.திரிசங்கு ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மலைச்சாமி மற்றும் அவருடைய நண்பர்களை கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளார்கள்.இதில் மலைச்சாமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதுகுறித்து மலைச்சாமி நண்பர் திரிசங்கு கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த காளீஸ்வரன்(28),காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(26),இந்திரா நகரை சேர்ந்த மணி(26),சிந்தாமணியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(28)ஆகிய நான்கு பேர்களை கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் இவர்களை தாக்குதலுக்கு தூண்டியதாக முன்னாள் மண்டலத்தலைவர் குருசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...