தேனி அல்லிநகரத்தில் செங்கல் காளவாசல் தொழிலாளியை தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை 4 பேரை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன்காலனியைச் சேர்ந்த பெத்தனசாமி மனைவி மாரியம்மாள்(38). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் முருகன்(47) என்பவரிடம் ரூ.63 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு, அவரது செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்தாராம், கடந்த 6 மாதங்களாக முருகனின் காளவாசலுக்கு வேலைக்கு போகாமல் இருந்த மாரியம்மாள், சில நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த பரமன் என்பவரது காளவாசலுக்கு வேலைக்குச் சென்றாராம்.
இதனால், முருகன், அவரது மனைவி லதா(37), இதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி நித்யா(23), பெரியகுளம் எஸ்.பி.ஐ.காலனியைச் சேர்ந்த ஜெயக்கொடி(60) ஆகியோர் தன்னை ஜாதியை குறிப்பிட்டு திட்டி, முன் பணமாக பெற்ற தொகையை உடனடியாக திருப்பித் தருமாறு மிரட்டியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிந்து முருகன், லதா, நித்யா, ஜெயக்கொடி ஆகியோரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

